மனைவியின் ஆபாச வீடியோவை கணவனுக்கு அனுப்பிய தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் எருமப்–பட்டியை அடுத்துள்ளஅலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி வீட்டில் குளித்து கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.பின்னர் அதனை காட்டி வீரலட்சுமியை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார். இது குறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவியின் ஆபாச வீடியோவை கணவனுக்கு அனுப்பிய தொழிலாளி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்–பட்டியை அடுத்துள்ளஅலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி.

அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மனோஜ் (28) என்பவர் கடந்த ஆண்டு வீரலட்சுமி வீட்டில் குளித்து கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

பின்னர் அதனை காட்டி வீரலட்சுமியை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார். இது குறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி பாஸ்கரன் (30) என்பவருடன் மனோஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறையை விட்டு வெளியே வந்த பிறகும் இவர்களது நட்பு தொடர்ந்தது.

அப்போது மனோஜ் வீரலட்சுமியின் ஆபாச வீடியோவை பாஸ்கரனுக்கு அனுப்பினார். அதை பார்த்த பாஸ்கரன் அந்த வீடியோவை வைத்து கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார்.

இது குறித்து வீரலட்சுமி தனது கணவர் குமாரிடம் தெரிவித்தார். அவர் பாஸ்கரனை போனில் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், குமாரின் செல்போனுக்கு வீரலட்சுமியின் குளியல் வீடியோவை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து பாஸ்கரன் மற்றும் வீடியோைவை அனுப்பிய மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com