தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி தொழிலாளி பலி

நிலக்கரி யார்டு அருகே செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி செல்டன் மீது மோதியது.பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி தொழிலாளி பலி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி கீழவைப்பார் சிப்பிகுளத்தைச் சேர்ந்தவர் செல்டன் (வயது 45). இவர் துறைமுகத்தில் உள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிலக்கரி யார்டு அருகே செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி செல்டன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது தொடர்பாக தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியை ஒட்டி வந்த புதுக்கோட்டை நடுக்கூட்டன்காட்டை சேர்ந்த ரமேஷ்குமார் (47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com