மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான தொழிலாளி தனசேகரன்.
பலியான தொழிலாளி தனசேகரன்.
Published on

நீடாமங்கலம்:

கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே உள்ள வலங்கைமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்.

இவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்துவிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பண்டித சோழநல்லூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 43) என்பவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பன்னீர் வீட்டுக்கு வந்தார்.

தொழிலாளியான இவர் அப்பகுதியில் தென்னை மட்டைகள் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

எதிர்பாராதவிதமாக தென்னை குருத்து உடைந்தது.

இதில் நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கியதில் தனசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com