மயிலாடும்பாறையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி சாவு

தொழிலாளி ஓட்டிவந்த பைக் மீது மற்றொரு பைக் பயங்கரமாக மோதியது. இதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ரகு(34) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி பொன்னம்படுகை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது காமன்கல்லூரை சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது பயங்கரமாக மோதியது.

ரத்தகாயம் எதுவும் இல்லாத நிலையில் ரகு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இதுகுறித்து ரகுவின்தாய் முருகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com