களக்காட்டில் தொழிலாளி தற்கொலை

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை.
களக்காட்டில் தொழிலாளி தற்கொலை
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் அடிக்கடி மது குடித்து விட்டு போதையில் இருந்து வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனைதொடர்ந்து விரக்தி அடைந்த முத்துசெல்வம் வீட்டில் விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அவரது மனைவி தங்கம் (42) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com