பாளையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்
பாளையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

நெல்லை:

பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் கடந்த 1-ம் தேதி சமாதானபுரம் பஸ் நிறுத்தத்தில் விஷம் குடித்தார்.

தொடர்ந்து அவர் தனது மகனுக்கு போன் செய்து விஷமருந்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

உடனே அங்கு வந்த அவரது மகன், கண்ணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com