கோவையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார். சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

கோவை,

கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63). கூலித் தொழிலாளி.

இவரது மனைவி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சேகர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குணமடைந்து கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com