மனைவி குடும்பம் நடத்த வராததால் மாமனார் வீட்டில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.
மனைவி குடும்பம் நடத்த வராததால் மாமனார் வீட்டில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த

நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழி லாளி தங்கராஜ் (வயது 38). இவருக்கும் வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.

தங்கராஜிற்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டதால், கண வன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தருணத்தில், நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை, சிட்டாம்பட்டி யிலுள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வரு மாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

மயங்கிக்கிடந்த இவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com