தேவதானப்பட்டியில் தேசிய மகளிர் தினவிழா

தேவதானப்பட்டி அருகே கல்லூரியில் தேசிய மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தினவிழாவில் கலந்துகொண்டவர்கள்.
மகளிர் தினவிழாவில் கலந்துகொண்டவர்கள்.
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மகளிர் தின விழா நடைபெற்றது.

பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் மீனாட்சி, வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அம்புஜம், குள்ளப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாதேவி, கல்வி இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் ஜெயப்பிரியா, தேனி தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி துறைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்து மகளிர்தின சிறப்புகளையும், மகளிரின் சாதனைகளையும் எடுத்துரைத்தனர்.

கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் போஸ் மற்றும் சுரேஷ் சஞ்சீவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவர்கள் கலந்து கொண்டு கவிதை,சொற்பொழிவு நிகழ்த்தினர்.

கல்லூரி முதல்வர் வேல்விழி  மகளிர் தின வாழ்த்து மற்றும் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com