கோவையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

காமராஜபுரம் நேருஜி நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
Published on

சரவணம்பட்டி,

கோவை மாநகராட்சி 31 -வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் நேருஜி நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் மற்றும் 31 -வது வார்டு கவுன்சிலர் வைரமுருகன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜ், கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com