கோவையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குழந்தை மற்றும் கணவருடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அனைவரும் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

அப்போது அதிகாலை 4 மணி அளவில் இளம்பெண் தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து இளம் பெண்ணின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தனது மகளை மீட்டு தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம் பெண்ணை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com