தச்சநல்லூரில் பெண் மாயம்

அக்சா வின்சி பெனிட்டாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 23-ந் தேதி மாலை காரில் வெளியே சென்ற அக்சா வின்சி மீண்டும் வீடு திரும்பவில்லை.
தச்சநல்லூரில் பெண் மாயம்
Published on

நெல்லை:

தச்சநல்லூர் சுகர் மில் காலனியை சேர்ந்தவர் மைக்கேல் பிரபாகர். இவரது மகள் அக்சா வின்சி பெனிட்டா (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவரை பிரிந்து தனது தந்தை மைக்கேல் பிரபாகர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி மாலை வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அவரது தந்தை தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெனிட் டாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com