பண்ருட்டி அருகே நெஞ்சு வலியால் பெண் போலீஸ் ஏட்டு சாவு

கனிமொழியை புதுவை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
பண்ருட்டி அருகே நெஞ்சு வலியால் பெண் போலீஸ் ஏட்டு சாவு
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (30) இவர் நெய்வேலி மகளிர் போலீஸ்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கனிமொழிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலிஏற்பட்டு புதுவை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.அங்கு அவருக்குஅழகான பெண் குழந்தைபிறந்தது.

தாயும் சேயும் நலமாக வீடு திரும்பினர்.நேற்று மாலை கனிமொழிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக புதுவைராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com