கூடலூரில் ஆட்டோவில் நகையுடன் கைப்பையை தவறவிட்ட பெண்

கைப்ைபயை போலீசார் மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது
கூடலூரில் ஆட்டோவில் நகையுடன் கைப்பையை தவறவிட்ட பெண்
Published on

ஊட்டி

கூடலூா் வட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவை விட்டு இறங்கும் போது தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டு சென்றதாக தெரிகிறது. சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது.உடனடியாக அவர் சம்பவம் குறித்து கூடலூா் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடலூா் டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் சாா்பு ஆய்வாளா் இப்ராஹிம், முத்து முருகன், அசோக் குமாா் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தடயத்தை சேகரித்தனா். தொடா்ந்து பெரிய சூண்டி பகுதியில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை செல்வதை அறிந்ததும், அங்கு சென்று ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரனை நடத்தி பெண் தவறவிட்ட 3 சவரன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com