பாம்பு கடித்து பெண் சாவு

வயலில் பருத்தி எடுக்கும் பணியில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார்.பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.
ஜெயா.
ஜெயா.
Published on

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.

இவரது மனைவி ஜெயா (வயது 42).விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரை பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயாவை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com