சிறுமுகை அருகே மகள் கணவரை பிரிந்ததால் பெண் தற்கொலை

ராதா ஆடுகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமுகை அருகே மகள் கணவரை பிரிந்ததால் பெண் தற்கொலை
Published on

கோவை,

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பாரதி நகரை சேர்ந்தவர் செட்டியப்பன் (வயது 52). இவரது மனைவி ராதா (48). இவர் ஆடுகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பவித்ராவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பவித்ரா கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு செல்லாமல் ராதாவின் வீட்டில் 8 மாதங்களாக இருந்து வந்தார். மகள் கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்து வந்ததை நினைத்து ராதா மனவேதனை அடைந்தார்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com