நெல்லை அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

பாலா,பேச்சியம்மாள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் பாலா. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மாரடைப்பால் இறப்பு

பாலா லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்கள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.

அதன்பின்னர் ஒரு வாரத்திலேயே மாரடைப்பு காரணமாக பாலா இறந்துவிட்டார். இதனால் பேச்சியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கணவரை நினைத்து கொண்டே அழுது கொண்டு இருந்த அவர், வீட்டில் இருந்த ஒரு பெரிய பொம்மைக்கு தனது கணவரின் ஆடை களை எடுத்து உடுத்தி வைத்துள்ளார்.

தற்கொலை

மேலும் அவரது ஆடைகளை தினமும் தூங்கும்போது அருகிலேயே வைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனாலும் கணவரின் பிரிவு அவரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com