

குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சொப்னா (39). இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொப்னாவின் தந்தை இறந்து விட்டார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.