குமாரபாளையம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

காவிரி ஆறு, பழைய காவிரி பாலம் மையப்பகுதியின் அடியில் பெண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர்.அவர் ஆற்ரில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டு விட்டனரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
குமாரபாளையம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் காவிரி ஆறு, பழைய காவிரி பாலம் மையப்பகுதியின் அடியில் பெண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குமாரபாளையம் போலீசார், பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும். அவர் ஆற்ரில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டு விட்டனரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர். குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் குருசாமிபாளையம் கங்கராஜ் என்பவரின் மனைவி மலர்க்கொடி(வயது 34), என்பதும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. மலர்கொடியின் தாய் சரஸ்வதியின் வீடு, குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் உள்ளது. அங்கு சென்ற மலர்கொடி வீட்டைவிட்டு வெளியேறி ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com