கடலூர் துறைமுகம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடலூர் துறைமுகம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கடலூர் முதுநகர்:

கடலூர் துறைமுகம் அருகே உள்ள ராசாபேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி ஷிபா (வயது 25). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2 மகன்கள் உள்ளனர். கணவர் விஜய் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மனைவி ஷிபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது உண்டு. சம்பவத்தன்று தாங்கமுடியாத வலியால் துடித்த அவர் புடவையால் ஜன்னலில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com