உடல்நிலை சரியாகாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் உடல்நிலை சரியாகாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.அதை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலென்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல்நிலை சரியாகாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி குள்ளம்மாள் (வயது 87). இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவரது கணவர் கிருஷ்ணன் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குள்ளம்மாள் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பலனளிக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது நேற்று காலை குள்ளம்மாள் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.

அதை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலென்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குள்ளம்மாள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com