மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி-பறையந்தாங்கல் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது,சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுவதாக தெரிகிறது,
சீரமைக்கப்படாத சாலையை படத்தில் காணலாம்.
சீரமைக்கப்படாத சாலையை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை சுமார் 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதோடு ஜல்லிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுந்து செல்வதாகக் கூறுகின்றனர். இவ்வழியாக கால்நடைகள் அதிக அளவில் சென்று வருவதால் அவைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை உள்ள சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com