பழுதான சாலை சீரமைக்கப்படுமா?

மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. பலர் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருநாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெருநாட்டான்தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம்,கங்களாஞ்சேரி,திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com