ஊர் பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஊர் பெயர் பலகையில் திருமண வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
ஊர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
ஊர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
Published on

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியூரில் இருந்து வருபவர்கள் பாபநாசம் வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பெயர் பலகையை மறைத்து கண்ணீர் அஞ்சலி, திருமண வாழ்த்து ஆகிய போஸ்டர்கள் ஒட்டப்படு வதால்அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திண்டாடு கின்றனர்.

மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர் எழுத்துக்கள் அழிந்து காணப்படுவதோடுபெயர் பலகை கீழே விழுந்து கேட்பார் இன்றி காணப்படுகிறது.

மேலும் இரவில் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

தொடர்ந்து ஒட்டப்படும் சுவரொட்டிகளால் ஊர் பெயர் பலகை விளம்பர பலகையாக மாறிவருகிறது.

உடனடியாக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com