தியாகதுருகம் அருகே மனைவி மாயம்; போலீசில் கணவர் புகார்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும்
தியாகதுருகம் அருகே மனைவி மாயம்; போலீசில் கணவர் புகார்
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திருமலை (வயது 29) இவரது மனைவி தனம் (20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனம் தனது குழந்தையுடன் சம்பவத்தன்று அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைக்கு சென்றார். பின்னர் தனம் வேைல முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ந்த கணவர் திருமலை மனைவி தனத்தை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருமலை கொடுத்த புகாரின் பேரில் தயாதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com