2 குழந்தைகளுடன் மனைவி மாயம்-கணவர் போலீசில் புகார்

புஞ்சை புளியம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மனைவி மாயமானார் இதையடுத்து கணவர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2 குழந்தைகளுடன் மனைவி மாயம்-கணவர் போலீசில் புகார்
Published on

ஈரோடு:

புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி, கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் ஆயில் மில்லில் பணியாற்றி வருகின்றார்.

இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு திவாகர் (11), தியாகு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்வத்தன்று வழக்கம் போல ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமம் ஊசிமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா(35).

இவர்களுக்கு 1 மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த கவிதா சம்வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து கணவர் முருகன் பர்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com