சங்கராபுரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி சாவு

மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.
சங்கராபுரம் அருகே  கணவர் இறந்த துக்கத்தில் மனைவி சாவு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 65) தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சின்னதம்பியும், லட்சுமியும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சின்னதம்பி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் சரியாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னதம்பி கடந்த 13-ந் தேதி இறந்தார்.

கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் லட்சுமி அழுது கொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சின்னதம்பி உடலை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லட்சுமியின் உடலையும் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com