பரமத்தி வேலூர் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் யார்?

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்தி வேலூர் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் யார்?
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். இறந்தி கிடந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் வெள்ளை நிற அரைக் கை சட்டையும், ஊதா நிறத்தில் கைலியும் அணிந்து இருந்தார். பரமத்திவேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மாத்திரைகளுடன் பஸ் நிலையத்திற்கு வந்திருந்த அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com