தென்காசியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்

ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 628 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
கூட்டத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலதிட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த 25 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்திற் கான காசோலை களையும், ஒரு பயனாளிக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9 ஆயிரத்திற்கான காசோலையினையும், 7 பேருக்கு ரூ. 9 ஆயிரம் கல்வி உதவித் தொகைக் கான காசோலைகளையும், ஒருவருக்கு ரூ. 1 லட்சம் விபத்து மரணம் நிதி உதவி தொகை என மொத்தம் ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திற னாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 628 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com