தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.16.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மனுக்கள் உள்பட மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.
திருநங்கை ஒருவருக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம்.
திருநங்கை ஒருவருக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் துறையின் சார்பாக, இந்திய படைப்பிரிவில் பணிபுரிந்து பணியிடை காலமானவர்கள் மற்றும் கொடுங்காயமுற்றோர்கள் ஆகியோரின் வாரிசுதாரர்க ளுக்கு கருணை அடிப்படை யில் 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 மதிப்பிலும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் திருநங்கை களுக்கான சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 12 திருநங்கையர்களுக்கு ரு.12 லட்சம் மதிப்பில் சிறுதொழில் கடன் உதவி தொகைக்கான ஆணை என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், அலுவலக மேலாளர் (பொது) ஹரிஹரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com