தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து 13 பயனாளிகளுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய காட்சி.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய காட்சி.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன்

தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களி டமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்க ளுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்க ளுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து 13 பயனாளிகளுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பி ரமணியன், தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com