ஆற்றில் மூழ்கிய ெவல்டிங் தொழிலாளியை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மேட்டூர் காவிரி ஆற்றில் ெவல்டிங் தொழிலாளி மூழ்கினார். அவரது உடலை 2-வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் மூழ்கிய ெவல்டிங் தொழிலாளியை  2-வது நாளாக  தேடும் பணி தீவிரம்
Published on

மேட்டூர், ஜூன்.20-

ஈரோடு பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). வெல்டிங் தொழிலாளி–யான இவர் நேற்று மேட்டூர் ராமமூர்த்தி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் உறவினருடன் அந்த பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தார்.

அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கு நின்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.

இதையடுத்து அவருடைய உறவினர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தண்ணீரி ல் மூழ்கிய மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து 2-வது நாளாக இன்றும் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருமைைலக்கூடல் போலீ–சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com