வார விடுமுறை; கும்பகோணம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம். சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள் பணியமா்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு.
வார விடுமுறை; கும்பகோணம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

தஞ்சாவூர்:

அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் சுபமுகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளன.

இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்குச் செல்ல 20 மற்றும் 21-ந் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோ தகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com