கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில்திருக்கல்யாண நிகழ்ச்சி

ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றன.சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில்திருக்கல்யாண நிகழ்ச்சி
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவில் 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி வருகிற ஜூன் 8-ந் தேதி வரை நடக்க உள்ளன.

இதையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரகார உற்சவம் மற்றும் பல்வேறு வாகனங்களில் நரசிம்மர் நகர் வலம் வருதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக நேற்று நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தன.

இதில், சீர்வரிசைகளுடன், சிறப்பு யாகம் நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க, மாலை மாற்றி நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றன. திருக்கல்யாணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய், இரவு கருட வாகனத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று(வியாழக்கிழமை) காலை அபிஷேகம், அலங்காரமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு யானை வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com