சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து சென்ற 100 பேருக்கு ரோஜா பூ வழங்கிய போலீசார்

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் வேப்பேரி பகுதியில் விதிகளை கடைபிடித்த பயணிகளை பாராட்டினர்.போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள்.
சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து சென்ற 100 பேருக்கு ரோஜா பூ வழங்கிய போலீசார்
Published on

சென்னை

சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை வேப்பேரி பகுதியில் இன்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் முறைப்படி வாகனங்களை ஓட்டியவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டினார்கள்.

மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடியும் கார்களில் சீட் பெல்ட் அணிந்த படியும் பயணம் செய்த 100 பேருக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பயணம் செய்தவர்களை பாராட்டி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com