நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் - கேரள கவர்னர் பேச்சு

உலகமயமாக்கல் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்கள் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என கேரள கவர்னர் கூறியுள்ளார்.
கேரள கவர்னர்
கேரள கவர்னர்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் நவீன விவசாயத்துக்கான 45 நாள் கருத்தரங்கை கன்னியாகுமரியில் நடத்துகிறது. இந்த கருத்தரங்கை கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விவசாயத்துறை தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உலகமயமாக்கல் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்கள் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஏராளமான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். எனவே இந்ததொழிலை மேம்படுத்தவும் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் விவசாயிகள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். விவசாயத் தொழிலிலும் சந்தைப்படுத்துதலிலும் புதிய தொழில்நுட்பம் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் வேலை செய்பவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான மக்களுக்கு வேலை அளிப்பவர்கள் ஆக மாற வேண்டும். அரசும் நிதி நிறுவனங்களும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகின்றன. அவற்றை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஐ.நா. சபையின் முன்னாள் ஆலோசகர் டாக்டர் ஜெபமாலை வினாஞ்சி ஆராய்ச்சி வரவேற்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com