ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு

வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து  சரிவு
Published on

பென்னாகரம்,

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விட ப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.

இதனால் நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.

இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேன க்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்த னர்.

இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

மீன்சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் மீன் வியாபாரம் விற்பனை களைகட்டியது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com