முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைவு

மழை நின்றதால் நீர் பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் முல்லைப்-பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது. கடந்த வாரம் 125 அடியில் இருந்த நீர் மட்டம் தற்போது 128.60 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால் நீர் வரத்து சரியத் தொடங்கியுள்ளது. நேற்று 965 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 100 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 68.21 அடியாக உள்ளது. 567 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36 அடி. 26 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 103.48 அடியாக உள்ளது. 1 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com