நெல்லையில் காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல்-தனுஷ்கோடி ஆதித்தன் திறந்து வைத்தார்

கோடை காலம் தொடங்குவதையொட்டி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.முடிவில் வடமாநில தொழிலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
தனுஷ்கோடி ஆதித்தன்  பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய காட்சி.
தனுஷ்கோடி ஆதித்தன் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோடை காலம் தொடங்குவதை யொட்டி மாவட்ட அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், மேற்கு மாவட்ட பொரு ளாளர் முரளி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் குமார், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், முகம்மது அனஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வடமாநில தொழிலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com