டிராக்டர் மோதி காவலாளி சாவு

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது.அறிவழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிராக்டர் மோதி  காவலாளி சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள குட்டியான் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது38). இவர் தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பெங்களூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடு ஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது.

இதில் அறிவழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com