கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காவலாளி சாவு

கழிவுநீர் கால்வாய்க்குள் கால் தவறி விழுந்தார்.சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காவலாளி சாவு
Published on

தருமபுரி,

கிருஷ்ணகிரி கீழ்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது52). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் கால்வாய்க்குள் கால் தவறி விழுந்தார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com