மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

நரேந்திர மோடியின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சி விவசாயிகள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் விளக்கி கூறினார்.
மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு
Published on

பாப்பாரப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சி விவசாயிகள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.

பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கியத்து வத்தையும் கடந்த நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூர்ந்தார்.

பிரதமரின் மக்களின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண்மை பற்றிய பேசிய கருத்துக்களை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com