வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி
Published on

விருதுநகர்

இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த ராமர் பூசாரி என்பவர் கூறியுள்ளார். இதனை நம்பி குருசாமி ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com