பணத்தகராறில் வாலிபர் கடத்தல்

சிவகாசி அருகே பண தகராறில் வாலிபர் கடத்தப்பட்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தகராறில் வாலிபர் கடத்தல்
Published on

விருதுநகர்

சிவகாசியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 45), தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்நத பாண்டித்துரை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் வைரமுத்துவின் மகன் முத்துக்குமார் (19) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முத்துக்குமாரை, பாண்டித்துரை, மாரி, அலர்ட் ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் தாக்கியதுடன் அவரை கடத்திச் சென்று விட்டனர். இதுபற்றி கருப்பசாமி, வைரமுத்துவுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கடத்திச்சென்ற பாண்டித்துரை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட வாலிபரை மீட்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com