முதல் முறையாக பெண் போலீஸ் டி.எஸ்.பி. நியமனம்

ராஜபாளையத்திற்கு முதல் முறையாக பெண் போலீஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாக கூறினார்.
முதல் முறையாக பெண் போலீஸ் டி.எஸ்.பி. நியமனம்
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை காண்காணிப்பாளரின் (டி.எஸ்.பி.) கீழ் 5 காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் என மொத்தம் 7 காவல் நிலையங்கள் உள்ளன. தனியாக டி.எஸ்.பி. அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தூர், ராஜபாளையம் வடக்கு பகுதிகள் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

இந்த பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தற்போது குறைந்து இருந்தாலும் அவ்வப்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுமாக இருந்து வருகிறது .

இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி 3 மாதங்களாக காலியாக இருந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராஜபாளையம் பகுதிக்கு நேரடியாக டி.எஸ்.பி. தேர்வு எழுதி பயிற்சி முடித்தவரே டி.எஸ்.பி.யாக நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்த நிலையில், இன்று ராஜபாளையத்திற்கு புதிய பெண்போலீஸ் டி.எஸ்.பி.யாக ப்ரீத்தி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

இவர் 2020-ம் ஆண்டு நேரடி டி.எஸ்.பி.யாக தேர்வு எழுதி சேலத்தில் பயிற்சி முடித்து ராஜபாளையத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களில் ராஜபாளையம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.

மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாகவும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி. பிரீத்தி தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றால் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com