மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது

மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது செய்யப்பட்டார்.வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 32). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் யுவராஜூடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜீவானம்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கார்த்திக் பிரபுவுக்கு கோர்ட்டு உத்தர விட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் பிரபு நேற்று இரவு சத்யாவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பிரபுவை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com