விஸ்வ இந்து பரிசத் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
விஸ்வ இந்து பரிசத் ஆர்ப்பாட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கிடசாமி தலைமை வகித்தார். திருக்கோவில்கள் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை தென் பாரத அமைப்பாளர் பாலு சரவண கார்த்திக் பேசினார். இதில் ஜல்லிக்கட்டு மற்றும் கோவில் யானை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயகணேஷ், விஎச்பி ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகர தலைவர் அருண், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர்‌ சரவண துரை‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com