அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போன் திருட்டு

அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போன் திருட்டு
Published on

 ராஜபாளையம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் அழகுராஜ். கட்டிட தொழிலாளி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பி கொண்டி ருந்தார்.

அப்போது அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் ஆர்.ஆர்.விலக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு ரோட்டோரமாக உள்ள மரத்தின் அடியில் படுத்து தூங்கி விட்டார். இதை பார்த்த மர்ம நபர்கள் அழகுராஜின் இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் திருடி சென்று விட்டனர்.

தூக்கத்தில் இருந்து விழித்த அழகுராஜ், தனது இருசக்கர வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ திருடி சென்றதை அறிந்த அவர் அது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com