கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை(35).இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த மில் தொழிலாளியான முத்துமாரியுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் நெருங்கிய தோழி ஈஸ்வரி. இந்த நிலையில் ஈஸ்வரி சில நாட்களாக முத்துமாரியுடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அழகுமலை, ஈஸ்வரிக்கு போன் செய்து முத்துமாரியுடன் ஏன் பேசவில்லை என விசாரித்துள்ளார். அப்போது ஈஸ்வரியின் சகோதரர் பாலமுருகன் செல்போனை பறித்து அழகுமலையை கண்டித்துள்ளார். பின்னர் முத்துமாரியின் வீட்டின் முன்பு அழகுமலை அவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது பாலமுருகன், தனது 2 நண்பர்களுடன் அங்கு வந்தார். அவர்கள் அழகுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்தி ரமடைந்த பாலமுருகன் தான் வைத்திருந்த கத்தியால் அழகுமலையை குத்திவிட்டு தப்பி சென்றார். அழகுமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com