சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 75,000 வரை முதலீட்டு மானியம்

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 75,000 வரை முதலீட்டு மானியத்தை கலெக்டர் வழங்கினார்.சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் நடந்த குறு, சிறு,  நடுத்தர தொழில் கடன் விழாவில் பயனாளிக்கு கடனுதவி காசோலையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். 
விருதுநகரில் நடந்த குறு, சிறு, நடுத்தர தொழில் கடன் விழாவில் பயனாளிக்கு கடனுதவி காசோலையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். 
Published on

விருதுநகர்

சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் கடன் பெற்று பயன்பெற்று வரும் வாடிக்கையாளர் களை கலெக்டர் கவுர வித்தார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

சிறப்பு தொழிற்கடன் விழாவில் 11 விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.11.74 கோடி மதிப்பில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

நீட்ஸ் திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாமில் வருகிற 1-ந்தேதி சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் முருகேசன், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com